பிச்சை…
என்னை பின்துடர்ந்தபடி
கை ஏந்தி கெஞ்சிய
இளவயது பெண்ணுக்காக
இறங்கவில்லை என் மனம்…
தொழுநோயால் பாதிக்கப்பட்டு
தன் கைகளிலும் கால்களிலும்
விரல்களை இழந்து
நடக்க இயலாமல்
கை ஊன்றி நடந்து வந்து
தன் கைகளில் உள்ள
பழுத்த புண்களை
தன் நாவால் ஈரப்படுத்தும்
அந்த முதியவர் கேட்டிருந்தால்
கொடுதிருபேன் என் கையில் உள்ளதை.
Categories: Uncategorized

அண்மைய மறுமொழிகள்