இஷ்டப்பட்டு எழுதிய கவிதையிது…
இஷ்டப்பட்டு எழுதிய கவிதையிதுஏகமாய் பிழையென சொன்னாய்…!
சந்தியும் சாரியையும் சரியாக சமையாது
உருபும் மரபும் தோளோடு இணையாது
இது என்ன கவிதையென்றாய்…!
கோர்வையாய் அணியின்றி
கோணலாய் வார்த்தையோடு
இது என்ன கவிதையென்றாய்…!
இடையிடையே விரிசல் கண்டு
இணையாத சொற்றொடராய்
இது என்ன கவிதையென்றாய்…!
இல்லாத ஒரு பொருளாய்
ஏற்காத செயளொன்றாய்
இது என்ன கவிதையென்றாய்…!
குற்றம் காண வந்ததாலே
குறைவின்றி சொல்லிவிட்டாய் -
சிரம்வரை எட்டியது ஏனோ
சிறு இதயம் வர மறுக்கிறது…!
சிரம்வரை எட்டியது ஏனோ
சிறு இதயம் வர மறுக்கிறது…!
இனிமையாய் வந்ததென
இமைக்காமல் எழுதிவிட்டேன்,
இஷ்டப்பட்டு எழுதிய கவிதையிது
பிழையோடே பின்னிவிட்டுப் போகட்டும்…!!!
— ஒரு மை தீர்ந்த பேனாவின் மொழி…![]()
Visu…
Categories: Uncategorized
Appanae Visu nanraaga ullathu…un unarchigalin aazham un kavithayil velipadugirathu….vaarthaigalai vaarthu kavithai sei