ஹைகூ

நவம்பர் 3, 2009 1 மறுமொழி
Puthumai Pen

புன்னகை பூவே

பச்சை  கொடியா
காட்டி  சென்றாள்
பச்சை  சுடிதார்!

காற்று  வாங்கும்   புத்தககடை
இன்டர்நெட்  கபெயில்
இளைஞர்  கூட்டம்!

பெண்  பார்க்கும்  திருவிழா
நண்பர்கள்  கூறிக்கொள்வது
அபிசியல் சைட்!

கோவில்  திருவிழா
அம்மான்களை தரிசிக்க
இளைஞர்  கூட்டம்!

அரசு  நூலகம்
அமைதியை  குலைப்பது
ஊழியர்  பெண்!

விடுமுறை  நாள்
என்னை  பார்க்காததுபோல் கடந்து  சென்றாள்
வகுப்பு  தோழி!

வகுப்பறை
கைப்பிடித்து  பேசுகின்றனர்
ஒரு  ஆணும்  ஆணும்!

Categories: Uncategorized

அனுபவம் புதுமை

“அனுபவங்கள் நம்மை முழுமை பெறச் செய்கிறது ” என்று எங்கோ நான் படித்தது நினைவுக்கு வந்தது.
வாழ்வில் அனுபவம் , “கலைந்து செல்லும் மேகங்களின் ஊடே பயணிப்பது போன்ற ஒரு நிகழ்வு”. நம்மில் பலர் அதனை மழை மேகமாய் மாற்றி பயன் பெறுவதும் உண்டு.

இப்போதெல்லாம் எனக்கு ஞாபக சக்தி அதிகமானது போன்ற உணர்வு. அதிகம் சம்பவங்கள் மறப்பதில்லை. அதுவே பிளஸ் அதுவே மைனஸ்.சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாண அனுபவம் கீழே உங்கள் பார்வைக்கு.

நாள் : 15 .5.2011
இடம் : திருநாகேஸ்வரம் – இராகு பெயர்ச்சி விழா

இன்றைய தினம் திருநாகேஸ்வரம் செல்ல வேண்டுமென்பது என் அம்மா  அப்பாவின் விருப்பம். வேண்டுதல் என வைத்துக் கொள்ளலாம். சில தினங்கள் முன்  ஒரு விபத்தில் சிக்கி ஆபத்தின்றி மீண்டது, அவர்கள் மனதில் இந்த விருப்பத்தை தூண்டியது என கொள்ளலாம். மிகுதியாக, எனக்கு ராகுவின் பார்வையால் உள்ள சிக்கலே அந்த விபத்திற்கு காரணம் என்பது அவர்களின் எண்ணம்.

எது எப்படியோ, அவர்களின் விருப்பத்திற்கிணங்க பயணம் தொடர்ந்தோம் நாகநாதஸ்வாமி கோவில் நோக்கி. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பூஜை காலம் என்பதால், பகல் 11 மணிக்கு திருச்சியிலிருந்து கும்பகோணம் பயணமானோம். திருநாகேஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராகுஸ்தலம். தற்சமயம் ராகுப்பெயற்சி நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மனிதனுக்குத் தான் எவ்வளவு சங்கடங்கள், துயரங்கள். ஏதாவது பரிகாரம் செய்தால் பயன் கிட்டுமோ என்று எல்லோர் முகத்திலும் தெரிந்த ஆவல், அவர்களது துயரங்களை பிரதிபலித்தது.

பொதுவாக நான் கோவிலுக்குச் செல்கையில் எல்லா நேரங்களிலும் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருப்பதில்லை. அமைதியான சூழலை பெரிதும் விரும்புபவன் நான். நமக்கு மீறிய சக்தி ஒன்று “கடவுள்” எனப்படுவதாக நம்புகின்றேன். அந்த சக்தியானது ஏதேனும் ஒரு விஷேச தினத்தின் போது தான் மனிதனுக்கு சகல சம்பத்துகளையும், குறை நிவர்திகளையும் புரியும் என்பதில் உடன்பாடில்லை. எல்லா நாளும், எல்லா பொழுதும் அந்த சக்திக்கு உகந்ததே. எனினும் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்கி, இந்தப் பெயர்ச்சி தினப் பெருங்கடலில் நானும் சிக்கிக் கொண்டேன்.

நான் சமீப காலமாக கடவுளிடம் அதிகம் வேண்டுவது இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கென்று தனியாக, சிறப்பாக வேண்டி பல காலம் ஆயிற்று என்று நினைவு. பக்குவமடைந்த நான் (அப்படிதான் நினைச்சிட்டு இருக்கேன்), இப்போதெல்லாம் கீழுள்ளவாரே வேண்டிக்கொள்வதுண்டு (நீங்களும் try பண்ணலாம்)

“இறைவா, விரும்பியதைத் தந்து ஆசிர்வதித்தால் பெருமகிழ்ச்சி – பேரின்பம் – மிக்க நன்றி. அப்படி இல்லாமல் விரும்பாத ஒன்று நிகழுமாயின், அதனை தாங்கிக் கொள்ள சக்தி கொடு. எதிர்கொள்ள தைரியம் கொடு. அதனை வெற்றியாய் மாற்றிட வலிமை கொடு….!”

Baba ஸ்டைல் வேண்டுதல் தான். ஆனாலும் நிதர்சனமான உண்மை இது தான். எல்லார்க்கும் நினைப்பது நடப்பதில்லை. அந்த வலியை வலிமை கொண்டு வென்றிட இந்த வேண்டுதல்.

ஒருவழியாய் அம்மா அப்பாவின் பாலபிஷேக வழிபாடு, விருப்பம் யாவும் நிறைவேற்றி ஊர் திரும்பிட முனைந்தோம். மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம். சிறிது நேர போராட்டத்தின் முடிவில் திருச்சி செல்லும் பேருந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து பிரயானிக்கலாணோம். இந்த பிரயாணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வினை உள்ளடக்கியது எனலாம். அந்த நிகழ்வு, இதோ கீழே…

“நான் மனதில் ஏதேதோ நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை யோசித்துக் கொண்டிருந்தேன் எனலாம். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், முந்தய காலங்களில் நிகழ்ந்த மனவருத்தங்கள், நேற்று நிகழ்ந்த சம்பவம், இவற்றிலிருந்து நான் விடுபட எடுத்த முயற்சிகள் என வந்து வந்து போயின. எல்லோர் மனதிலும் எழுவது போல், இந்த flashback ஏதோ உலகில் நான் மட்டுமே துன்பக்கடலில் உழன்றவனாய் நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.

ஏதோ ஒரு நிறுத்தத்தில், ஒரு முதியவரும் ஒரு சிறுவனும் ஏறினர். அந்தச் சிறுவன், நேராக என்னருகே வந்து நின்று கொண்டான். என்னை மாதிரி (!!!) அவனும் அழகாகவே இருந்தான். பேருந்து போகும் வேகத்தில் அவன் அல்லாடுவதைக் காணச் சகியாத என் அம்மா, அவனை என் மடியில் அமர்த்துமாறு கூறவே, நானும் மடியமர்த்திக்கொண்டேன். சிறுவன் சுமார் 6 வயதைத் தொட்டவன். சிறிது நேரத்தில் என் பக்கத்து இருக்கை காலியாகவே, என் அம்மாவும் என்னருகே வந்தமர்ந்தார்.

அந்தச் சிறுவனிடம் இயல்பாகப் பேசி வரவே, அவனும் எங்களிடத்தில் நன்றாக ஒட்டிக் கொண்டான். சிறுவன் நிஜத்தில் கொள்ளை அழகு. மழழை மொழி. தாராளமாகப் பேசி வந்தான். அவன் தாத்தாவைப் பற்றி, அவன் ஆயாவைப் பற்றி (ஆயா என்பது கிராமங்களில் பாட்டி என்னும் பொருள் குறித்தது…). அவன் அண்ணனைப் பற்றி, நேற்று கண்ட வேட்டைக்காரன் சினிமா பற்றி என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

இவ்வளவும் சொல்கிறாயே, உன் வீட்டார் என்ன செய்கிறார்கள் என என் அம்மா கேக்க, அவனும் “என் தாத்தா கிராமத்தில இருக்கு, ஆயவும் கிராமத்துல இருக்கு, அம்மா வீட்ல இருக்கு, பிரியா அக்கா ஸ்கூல் போயிருக்கா, அண்ணனும் ஸ்கூல் போயிருக்கான், அண்ணனோட அப்பா லாரி ஓட்டுறார்…” என பேசிக்கொண்டே சென்றான். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “அண்ணனின் அப்பா என்றால்…? ” ஒருவேளை தனது பெரியப்பாவைப் பற்றி சொல்கிறான் என்றெண்ணி “உன் அப்பா என்ன செய்கிறார் என்று என் அம்மா கேட்டு வைத்தார்.

அவன் கூறிய பதிலின் ஆழம் உணராது அந்த சிறுவன், ” என் அப்பா தான் ஓடி போயிட்டாரே…” என்று சொல்ல நாங்கள் சற்றே ஆடிப் போனோம். மேற்கொண்டு கேட்க கேள்வி ஏதும் வரவில்லை எங்களுக்கு. இவையாவும் புரியாது, அந்த சிறுவன் தானாக மழழை குணம் மாறது அடுக்கடுக்காய் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டோம். என் அம்மா கண்கள் கலங்கி இருப்பதை நான் உணர்ந்தேன். இந்த வயதில் அவன் தாயிருக்கும் நிலையை அவனால் உணர்ந்திருக்க முடியவில்லை, தந்தை இல்லாது எதிர்கொள்ள இருக்கும் துன்பங்களும் அவன் அறிந்திருக்கவில்லை. நினைக்கும் போதே நெஞ்சம் பாரமானது தெளிவாகப் புரிந்தது. நம் எல்லோரும், சிறு துயரம் என்றாலும் வாழ்வே முடிந்துவிட்டதாக அல்லல் படுகின்றோம். இந்த சிறுவனால் அப்படி எதுவும் நினைக்க இயலாது. அவன் முன்னே நானும், என் துயரங்களும் தூசாகத் தெரிந்தோம். கண்முன்னே தோன்றி மறைந்தன சம்பவங்கள். ஆச்சர்யமாய் இருந்தது, என் கண்களின் ஓரத்திலும் ஈரம். அந்தச் சிறுவன் நலமோடு இருக்க நிஜமாய் பிரார்த்தித்துக் கொண்டேன், மனதில்.

இந்த நிமிடமும் கடந்து போகும்…நம் வாழ்வின் பிரயாணம் தொடரும். இதுதான் ஒருவேளை நாகநாதஸ்வாமி எனக்களித்த அருட்பாடமோ என கேட்டுக்கொண்டேன் மனதில்.

அனுபவம் புதுமை….!!!

Visu…

Categories: Uncategorized

அவள் வருவாள்

சுவாசித்து  கொண்டிரு
உன்  மனம்  மயக்கும்
சுகந்த்தமாய்
அவள் வருவாள்

நடந்து  கொண்டிரு
உன்  கூட  நாடாகும்  துணையாய்
அவள்  வருவாள்

விழித்து  கொண்டிரு
உன்னை  தூங்க  வைக்கும்  தாலாட்டாய்
அவள்  வருவாள்.

Categories: Uncategorized

பிச்சை…

தானம்

தானம்

என்னை  பின்துடர்ந்தபடி
கை  ஏந்தி  கெஞ்சிய
இளவயது  பெண்ணுக்காக
இறங்கவில்லை  என்  மனம்…

தொழுநோயால்  பாதிக்கப்பட்டு
தன்  கைகளிலும்  கால்களிலும்
விரல்களை  இழந்து
நடக்க  இயலாமல்
கை  ஊன்றி  நடந்து  வந்து
தன்  கைகளில்  உள்ள
பழுத்த  புண்களை
தன்  நாவால் ஈரப்படுத்தும்
அந்த  முதியவர்  கேட்டிருந்தால்
கொடுதிருபேன்  என்  கையில்  உள்ளதை.

Categories: Uncategorized

சாரல்

சாரல்

சாரல்

மழையில்  நீ  நனைகயிலே
என்  மனமோ  குடை பிடிக்க
நீ  துவட்டிகொல்கயிலே
என்  மனமோ  நனையுதடி!

Categories: Uncategorized

என் விருப்பங்கள்…

வானம் வசப்படும்

வானம் வசப்படும்

கனத்த  கருமேகமாகவே
இருக்க  விரும்புகிறேன்
மழை  துளியாய்
நீயும்  இருந்தால்

வளைந்த  வில்லாகவே
இருக்க  விரும்புகிறேன்
வண்ணங்களாக
நீயும்  வந்தால்…

Categories: Uncategorized

உனக்காக நான்…

என்னை போல் ஒருவன்

என்னை போல் ஒருவன்

நீ  முரடன்  என்று
சொல்வதற்கே
குறுந்தாடி  வளர்த்தேன்;

நீ  பிடுங்கி
எறியவே
சிகரட்  புகைதேன்;

உன்னோடு  பேசவே
பாண்  மென்றேன்;

உன்னை   பார்வையால்
மிரட்டவே
பீர்  குடித்தேன்;

எளிதாய்  நீ
நெஞ்சில்  நுழைய
பட்டன் தொலைத்தேன்!!

Categories: Uncategorized

இஷ்டப்பட்டு எழுதிய கவிதையிது…

நவம்பர் 29, 2009 1 மறுமொழி
இஷ்டப்பட்டு எழுதிய கவிதையிது
ஏகமாய் பிழையென சொன்னாய்…!

சந்தியும் சாரியையும் சரியாக சமையாது
உருபும் மரபும் தோளோடு இணையாது
இது என்ன கவிதையென்றாய்…!

கோர்வையாய் அணியின்றி
கோணலாய் வார்த்தையோடு
இது என்ன கவிதையென்றாய்…!

இடையிடையே விரிசல் கண்டு
இணையாத சொற்றொடராய்
இது என்ன கவிதையென்றாய்…!

இல்லாத ஒரு பொருளாய்
ஏற்காத செயளொன்றாய்
இது என்ன கவிதையென்றாய்…!

குற்றம் காண வந்ததாலே

குறைவின்றி சொல்லிவிட்டாய் -
சிரம்வரை எட்டியது ஏனோ
சிறு இதயம் வர மறுக்கிறது…!

இனிமையாய் வந்ததென
இமைக்காமல் எழுதிவிட்டேன்,
இஷ்டப்பட்டு எழுதிய கவிதையிது
பிழையோடே பின்னிவிட்டுப் போகட்டும்…!!!

— ஒரு மை தீர்ந்த பேனாவின் மொழி…

Visu…

Categories: Uncategorized

தேடல்

நவம்பர் 3, 2009 மறுமொழியவும்

குடும்பபாங்கான
பெண்  வேண்டும்  என்றார்கள்
தேடி  அலைந்தேன்
கோவிலிலே!!

Categories: Uncategorized

உனக்குத் தெரியுமா…???

அக்டோபர் 17, 2009 1 மறுமொழி

உனக்குத் தெரியுமா…images

அவ உன் 
முறைப்பொன்னுடா என்று
நம் சிறுவயதில்
பாட்டி விளையாட்டாய் சொன்னபோதே
நீ என்னவள் என்று 
முடிவு செய்தேனே அது
உனக்குத் தெரியுமா?

உன் கைப்பிடித்து நடந்த 
அந்த சிறுவயது நாட்கள் 
என் மனதில் 
இன்றும் அரங்கேறுவது 
உனக்குத் தெரியுமா?

நீ வீட்டிற்கு வரும்
அந்த மே மாதத்திற்காக
நான் வருடம் முழுதும் 
காத்திருந்தது 
உனக்குத் தெரியுமா?

உன்னை சிரிக்க வைக்க
நான் படித்த நகைச்சுவைகளை எல்லாம்
மனப்பாடம் செய்தது 
உனக்குத் தெரியுமா?

உனக்காய் செலவு செய்ய
வருடம் முழுதும் காசு போட்ட
உண்டியலை உடைப்பேனே, அது
உனக்குத் தெரியுமா?

நீ உறங்க 
கதை கேட்பாய் 
அதற்காக நான் படித்த 
புத்தகங்கள் எத்தனை என்று
உனக்குத் தெரியுமா?

ஒரு நாள் அதிகாலை
விளையாட்டாய் என் முகத்தில் 
கண் மையால் நீ 
மீசை வரைந்த போது
அதை உணர்ந்தும்
கண் மூடி படுத்திருந்தேன்
உன் ஸ்பரிசம் பெற
அது உனக்குத் தெரியுமா?

மறுநாள் உன் முகத்தில்
நான் மீசை வரைந்த போது 
உன் மேனி குளுமையில்
சிலிர்த்துப் போனது 
உனக்குத் தெரியுமா?

என் அறையில் நீ உறங்கும்போது 
கண் இமைக்காமல் உன் முகத்தை
நான் பார்த்திருந்த நிமிடங்களை 
உனக்குத் தெரியுமா?

நீ என்னை எண்ணி 
வியக்க வேண்டுமென்றே
நான் வரைந்த ஓவியங்கள் 
எத்தனை என்று 
உனக்குத் தெரியுமா?

எங்கே நீ என்னை விட
உயரமாக வளர்ந்து விடுவாயோ 
என்று எண்ணி 
நான் குதித்த உயரங்களை 
உனக்குத் தெரியுமா?

என் நண்பர்கள் அனைவரும்
சக மாணவியர் பின்னால் அலைய
நாள் மட்டும் 
உன் நினைவில் அலைந்தது 
உனக்குத் தெரியுமா?

பல வருடங்களாக 
நீ அனுப்பிய 
வாழ்த்து அட்டைகளையும் கடிதங்களையும்
நான் பொக்கிஷமாக வைத்திருப்பது
உனக்குத் தெரியுமா?

உன் கடிதங்களின் இறுதியில்
‘Yours Lovingly’ என்று எழுதுவதை
எனக்கு சாதகமாகக் கருதி 
நான் மகிழ்ந்த தருணங்களை 
உனக்குத் தெரியுமா?

நீ சோர்ந்து போகும் தருணங்களில்
உனக்கு நான் கூறும் அறிவுரைகளை
எண்ணி நானே வியந்து போனது 
உனக்குத் தெரியுமா?

பன்னிரண்டாம் வகுப்பில்
முதல் வகுப்பில் தேர்வு பெற்றும்
மகிழாத நான்
பத்தாம் வகுப்பில் நீ
இரண்டாம் வகுப்பில் 
தேரியபோது கொண்டாடியது 
உனக்குத் தெரியுமா?

உன் தந்தை வழி 
முறைப்பையனிடம் 
நீ சிரித்துப் பேசியபோதெல்லாம்
பொறாமையில் நான் நொந்து போனது 
உனக்குத் தெரியுமா?

ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும்
உனக்காய் நான் வாழ்த்து அட்டை 
வாங்கி வைத்தது 
உனக்குத் தெரியுமா?

ஒரு முறை 
நீ விட்டுச்சென்ற துப்பட்டாவை
யாரும் பார்க்காமல்
நான் முத்தமிட்டு அணைத்துக்கொண்டது
எத்தனை முறை என்று
உனக்குத் தெரியுமா

உன்னை நாயகி ஆக்கி
நான் எழுதிய 
காதல் கவிதை
எத்தனை என்று
உனக்குத் தெரியுமா

நானாகச் சொல்ல வேண்டாம்
நீயாகச் சொல்ல வேண்டும் என்று 
நான் காத்திருந்த வருடங்கள்
எத்தனை என்று 
உனக்குத் தெரியுமா

உன் காதல் கைகூட
நீ என்னை அணுகியபோது
நான் அனுபவித்த வேதனை 
எவ்வளவு என்று 
உனக்குத் தெரியுமா?

உன்னோடு நான் 
நடந்த பாதைகளில்
‘ உன் நினைவுகளோடு ‘
நான் நடந்து செல்வது 
உனக்குத் தெரியுமா …..???

Categories: கவிதை
Follow

Get every new post delivered to your Inbox.